ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:45 IST)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே 
 
இதையடுத்து இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தவுள்ளது. 
 
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.