புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (07:51 IST)

தமிழகத்தில் 45 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த  45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் 45 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை முதல் மழை இல்லாததால் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளும் இன்று இயங்கும்

மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.