புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (14:17 IST)

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!
அகமதாபாத் விமான விபத்தில், நர்ஸ் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரை விமர்சனம் செய்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ல
ண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற நர்ஸ் பயணம் செய்தார். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மறைவு குறித்து தாசில்தார் பவித்ரன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்.
 
அவர் தனது முகநூல் பக்கத்தில், "நர்ஸ் ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது. ஆனால், அவர் அதை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றார். அதற்கான பலனை அவர் அடைந்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார். பவித்ரனின் இந்த அநாகரிகமான கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 
கேரளாவை சேர்ந்த நர்ஸ் ரஞ்சிதாவுக்கு சொந்த ஊரில் மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலையை விட்டுவிட்டு அவர் சில மாதங்களுக்கு முன் லண்டன் சென்று நர்ஸ் வேலை பார்த்தார். விடுமுறைக்காக கேரளா வந்திருந்த நிலையில், மீண்டும் லண்டன் சென்றபோதுதான் அவரது வாழ்க்கை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran