வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)

ஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு

அக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அன்று ஒரே நாளில் சுமார் 25 செமீ மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் அரசுப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும் அனைவரும் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும்  புதுச்சேரியில் நாளை 6ஆம் தேதி சனிக்கிழமை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை அரசு அறிவித்துள்ளது