1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain overnight! Warning for 8 districts today!

இரவோடு இரவாக வெளுத்த கனமழை! இன்றும் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Rain

வளிமண்டல சுழற்சியால் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது.

 

இந்நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth K
அடுத்த கட்டுரையில்
விரைவில் வரியை நீக்கும் அமெரிக்கா? இந்தியாவுடன் சமரசம்! டெல்லி மீட்டிங் வெற்றி!