ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (16:43 IST)

ஜூன் 5-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் ஜூன் 5 வரை இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திர வெயில் முடிந்த போதிலும் தற்போதும் கடுமையான வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் ஜூன் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசப்படும் என்றும் எனவே இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran