வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (08:43 IST)

7 மாவட்டங்களை குளிர்விக்க போகுது மழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை காலம் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்கினி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மெல்ல மெல்ல வெயில் குறைந்து வருகிறது. மண்ணை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரிஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edit by Prasanth.K