1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (07:34 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்தாலும் இன்னும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் 16  நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் வெப்பத்தை தணிப்பதற்காக அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழை பெய்யப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva