4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
நவம்பர் 15ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தேனி திண்டுக்கல் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நவம்பர் 15ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
மேலும் இன்று மாலை இன்றும் நாளையும் குமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது