செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (08:46 IST)

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – இன்று முதல் மழை வாய்ப்பு!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், வடமேற்கு பகுதியில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதால் மார்ச் 4ம் தேதி தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.