புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 மே 2023 (15:19 IST)

இன்னும் சிலமணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!.

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்துவிட்ட போதிலும் இன்னும் 100 டிகிரிக்கும் அதிகமாக பல இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva