ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (18:51 IST)

சென்னையில் ஜில்லென்று மழை!!!

தற்போது சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் சில நாட்களாக பல இடங்களில் கனமான மழையும், பல இடங்களிலும் லேசான தூரலும் பெய்துவந்தது.

இந்நிலையில் தற்போது சென்னையின் தியாகராய நகர், சைதாபேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்துவருகிறது.

சென்னையில் பல நாட்களாக தண்ணீர் பஞ்சம் நிலவி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில், 6 மாதங்கள் கழித்து மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.