புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (15:10 IST)

இந்த தடவை கரெக்டா மழை பெய்யும் – தேதி குறித்த வானிலை மையம்

போன வருடம் போல இல்லாமல் இந்த முறை சரியான அளவு வடக்கிழக்கு பருவமழை பெய்யும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினோ எனப்படும் வானிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வானிலை பல்வேறு மாற்றங்களை கண்டது. அதிக மழை, அதிக குளிர் என ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் தீவிர காற்று வீசுதல், அதிக வெப்பம் எனவும் உலகையே சோதித்து வருகிறது எல் நினோ.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எல் நினோ நிலை மெல்ல குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. எல் நினோ மாற்றம் அடைவதால் சற்று தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் சரியான அளவு மழையை தரும் என கூறியிருக்கிறது.

இதை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையமும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 30ம் தேதி உருவாகும் சாத்தியம் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மத்திய மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் சில நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.