செங்கல்பட்டு கொட்டித் தீர்த்த கனமழை.. பாம்பு, தேள் வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்..!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியுடன் உள்ளனர்.
குறிப்பாக ஸ்ரீநகர், கனகபரமேஸ்வரி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதி மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.
மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டி வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியுடன் செல்கின்றனர்.
குறிப்பாக செம்மஞ்சேரி, நாவலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக அந்த பகுதி வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
Edited by Siva