குறைந்த காற்றழுத்த தாழ்வு எதிரொலி: நாளை 14 மாவட்டங்களில் கனமழை
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது
இந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 10ஆம் தேதியன்று சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது
இதனால் மேற்கண்ட 14 மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva