1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Forecast for 10 Tamil Nadu Districts Today

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

கனமழை
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென் இந்தியப் பகுதிகளின் மேலும், குமரி கடல் பகுதிகளின் மேலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளே இதற்கு காரணமாகும்.
 
இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 34 
 
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!