அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்த்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. கன்னியாகுமரி அருகே தென்மேற்குக் வங்கக் கடலில் 500 கி.மீ தூரத்தில் அது நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து கன்னியாகுமாரி கடல்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அடுத்த 23 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழகத்தில் பல பகுதிகளில் சுமார் 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.