வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:56 IST)

இன்றிரவு தான் ஆட்டமே இருக்குது: சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 
தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதை அடுத்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து உள்ளதாகவும் சீரான மழை இன்னும் சில மணி நேரத்தில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
தென் சென்னை, இசிஆர், ஓஎம் ஆர் ஆகிய பகுதிகளில் முதலில் மழை நிற்கும் என்றும் அதன் பின்னர்தான் மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளில் மழை குறைவாகவே பெய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva