1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Flight Delays in Chennai Due to Heavy Rainfall

கனமழை எதிரொலி: சென்னை விமானங்கள் தாமதம்.. பயணிகள் அதிருப்தி..!

Flight
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தென்மேற்கு வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை அடுத்து நவம்பர் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்த நிலையில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ரன்வேயில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், எனவே விமான பயணம் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல் ஹைதராபாத் செல்லக்கூடிய விமானமும் 30 நிமிடங்கள் தாமதமாகி செல்கிறது. மேலும், சென்னைக்கு வரும் விமானங்களின் வருகையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நாம் தமிழரிலிரிந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்த 500 பேர்! - அதிர்ச்சியில் சீமான்??