வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:15 IST)

6 நாட்களுக்கு கனமழை என்ற அறிவிப்பு.. ‘கங்குவா’ வசூலுக்கு சிக்கலா?

அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை மறுநாள் வெளியாக உள்ள ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 
இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகர் சூர்யா உள்நாட்டில் மட்டும் அல்லாது, வெளிநாட்டிற்கும் பயணம் செய்து செய்தார். இந்த நிலையில், ‘கங்குவா’ படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும், குறிப்பாக 2000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை மறுநாள் ‘கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இன்று முதல் ஆறு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு, இந்த படத்தின் வசூலுக்கு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதே பிரச்சனை தான் வேட்டையன் திரைப்படம் வெளியான போதும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran