1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:31 IST)

கார் ரேஸ், ஏர் ஷோவை தொடர்ந்து.. சென்னையில் பறக்கும் பலூன் சாகசம்! - எப்போ தெரியுமா?

Balloon Festival

சென்னையில் சமீபமாக பல சர்வதே அளவிலான ரேஸ் போட்டிகள், விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், அதை தொடர்ந்து பறக்கும் பலூன் சாகசங்களும் விரைவில் நடைபெற உள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளில் பறக்கும் பலூன் திருவிழா நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும்  தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் நடத்தப்படும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அங்கீகாரம், கவனம் பெற்றவையாக உள்ளது.

 

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அவ்வாறாக நடந்த திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்ற நிலையில், விதவிதமான உருவங்களில் பறக்கும் பலூன்கள் ஆச்சர்யப்படுத்தியதுடன், மக்களும் அதில் ஏறி பயணம் செய்தனர்.
 

 

இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டில் பறக்கும் பலூன் திருவிழாவை மேலும் விரிவுப்படுத்தி 3 நகரங்களில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி, கோவை மற்றும் தலைநகர் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கும் இந்த பலூன் திருவிழா ஜனவரி 10ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியில் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு நாட்கள் பலூன் திருவிழா நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K