வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இடி மின்னலுடன் மழை: இன்னும் 3 நாட்களுக்கு மழை என தகவல்!

சென்னையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு மிக அதிக பருவ மழை பெய்துள்ள நிலையில் மழை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மழையால் ஏற்படும் சேதத்தை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது