இப்பவே தாங்க முடியலயே: வெயில் இன்னமும் அதிகமாகுமாம்!

இப்பவே தாங்க முடியலயே: வெயில் இன்னமும் அதிகமாகுமாம்!


Caston| Last Modified செவ்வாய், 16 மே 2017 (12:43 IST)
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் வெளியிலில் அதிகமாக செல்வதை தவிர்கின்றனர்.

 
 
நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. இதனையடுத்து வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
 
தமிழக வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணித்து சொல்லும் வெதர் மேன் பிரதீப் ஜான் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மே 15-ஆம் தேதி (நேற்று) மிகவும் வெப்பமான நாளாக குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் 40 டிகிரி வெயிலை சந்தித்திருக்கிறது சென்னை. ஆனால் கடந்த ஆண்டு இந்த வெப்ப அளவு மே 28-ஆம் தேதிதான் பதிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு வெயிலானது கடந்த ஆண்டைவிட மிக முன்கூட்டியே உக்கிரமடைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் இதை விட வெப்பம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார் வெதர் மேன் பிரதீப் ஜான்.


இதில் மேலும் படிக்கவும் :