1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மே 2024 (10:14 IST)

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

heart attack
ஓடும் அரசுப் பேருந்தில் நடத்துனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பயணிகளுடன் அரசு மருத்துவமனைக்குள் பேருந்து சென்ற நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் நடத்துனரை காப்பாற்ற முடியவில்லை.
 
புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி தமிழக அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது கடலூருக்குள் பேருந்து நுழைந்தபோது நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனே ஓட்டுனர் கோபால், கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றார். 
 
அங்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் நடத்துனர் பன்னீர் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அதன்பின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் நடத்துனர் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஓடும் பேருந்தில் திடீரென நடத்துனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதும் அதன் காரணமாக அவர் உயிர் இழந்ததும் பயணிகள் மத்தியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran