1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (10:06 IST)

பேருந்துக்கு கீழே படுத்து உறங்கிய டிரைவர் தலை நசுங்கி சாவு: கோவையில் ஒரு சோக சம்பவம்..!

கோவையில் பேருந்து டிரைவர் ஒருவர் பேருந்துக்கு கீழே படுத்து உறங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக பேருந்து சக்கரம் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த தனியார் பேருந்து டிரைவர் கருப்பசாமி என்பவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு பேருந்து கொண்டு வந்து செட்டில் நிறுத்தினார். அதன் பிறகு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பேருந்து கீழே படுத்து தூங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் எழுந்த நிலையில் கருப்பசாமியையும் எழுப்பி விட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் எழுந்திருக்காமல் அசந்து தூங்கிய நிலையில் மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் பேருந்தை எடுத்து பணிக்கு கிளம்ப தயாராகினர்.

அப்போது கருப்பசாமி ஓட்டும் பேருந்தை நேற்று வேறொரு டிரைவர் ஓட்டிய நிலையில் அவர் பேருந்து கீழ் கருப்பசாமி தூங்கியதை கவனிக்காமல் முன்னோக்கி பேருந்தை இயக்கினார். அப்போது பேருந்தின் சக்கரம் கருப்பசாமியின் மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva