செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (18:28 IST)

தேர்வு எழுதிய போது மாரடைப்பு: 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
இதுகுறித்து தெலுங்கானா மாநில கல்வி அதிகாரிகள் கூறுகையில்,
 
ஹைதராபாத், எல்லாரெட்டிகுடாவில் அமைந்துள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் படித்து வந்த மாணவன் குரு ராஜா. இவன் செகந்திராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் ப்ளஸ் டூ தேர்வு மையத்தில் இன்று தேர்வு எழுதிக்கொண்டிருந்தான்.
 
அப்போது மாணவன் குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றனர்.
 
தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 9.83 லட்சம் மாணவர்கள் இண்டர்மீடியேட் (11, 12 வகுப்புகள்) தேர்வு எழுதி வருகின்றனர்.