1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (11:50 IST)

பொங்கல் பரிசு வாங்க சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்

வரும் தைத்திங்கள் முதல் நால் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் பொங்கல் பரிசை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் எடையாளம் என்ற கிராமத்தில் பொங்கல் பரிசு வாங்க சென்ற 60 வயது ஆறுமுகம் என்ற முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவருக்கு திடீரென  மாரடைப்பால் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பொங்கல் பரிசு வாங்க சென்ற ஆறுமுகம் மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.