ரஜினியை சந்திக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்

rajinikanth
ரஜினியை சந்திக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்
siva| Last Updated: வியாழன், 3 டிசம்பர் 2020 (17:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததுடன் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடும் தேதியையும் அரசியல் கட்சி தொடங்கும் மாதத்தையும் அறிவித்துள்ளார். எனவே அவரது அரசியல் கட்சி குறித்த பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும் அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகிய இருவரையும் முக்கிய பொறுப்பாளராக நியமித்தார் என்பதும், அவரது அரசியல் கட்சி குறித்த பணிகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருகை தருவது குறித்து விமர்சனம் செய்யும் வகையில் சில அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவிக்கும் நிலையில் ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனமும் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பல அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாகவும் இன்று மாலை 5 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை நிலத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்மீக அரசியல் என்றால் காவி அரசியல் என்று ரஜினியை பிடிக்காதவர்கள் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சந்திக்க இருப்பதை அடுத்து இதுதான் உண்மையான ஆன்மீக அரசியல் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :