ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்த முக . அழகிரி...
சமீபத்தில் முக.அழகிரி பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பதிலளித்த முக.அழகிரி அது வதந்தி என்று தெரிவித்தார்.
பின்னர், வரும் தேர்தலில் தனது முக்கியத்துவம் இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று தனது அரசியல் கட்சி தொடங்கவுள்ளதுகுறித்த அதிராகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறிய ரஜினிக்கு முக.அழகிரி தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞர் இறந்த பின் முற்றிலுமாகத் திமுகவிலிருந்து புறக்கணிக்கப்பட்ட முக.அழகிரி இனி அடுத்து தனது அரசியல் பயணத்தை எப்போது ஆரம்பிக்கப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் அவர் ரஜினியின் கட்சிக்கு ஆதரவளிப்பாரா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.