வியாழன், 2 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (15:56 IST)

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்த இளம் கலைஞர்கள்!

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்த இளம் கலைஞர்கள்!
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அனிருத் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லி சொல்லி ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி இன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ரஜினிகாந்த் ”கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றும் பின் வாங்க மாட்டேன். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. எனினும் இந்த அரசியலில் ரான் வெறும் கருவிதான். மக்கள்தான் என்னை இயக்குபவர்கள். இந்த தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அது மக்களுடைய வெற்றி அல்லது தோல்விதான்” என கூறியுள்ளார். மேலும் கட்சிக்கு இரண்டு பொறுப்பாளர்களாக அர்ஜுன் மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்துள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து அனிருத் ‘இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம் . மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’ எனக் கூறியுள்ளார். அதே போல ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் ‘வாவ் தலைவா வா தலைவா… மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’ எனக் கூறியுள்ளார்.