புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (11:41 IST)

”வன்முறையை தூண்டுகிறாரா சூர்யா?”…பாஜகவினர் கொந்தளிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்த நடிகர் சூர்யாவின் மீது, வன்முறையை தூண்டுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா.

சமீபத்தில் சூர்யா கலந்துகொண்ட கல்வி அறக்கட்டளை குறித்த நிகழ்வில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவை குறித்து கடும் விமர்சனத்தை தெரிவித்தார். இந்த விமர்சனத்திற்கு பாஜக இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று மதுரை உசிலம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட எச்.ராஜா, புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்து வன்முறையை தூண்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இனி இவ்வாறு மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தால், சூர்யா பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.