வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம் என்பதால் வங்க கடலின் தெற்கு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.