தொடர்புடைய செய்திகள்
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சீமான் நேரில் ஆஜராக சம்மன்
- சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து இந்த மூன்று பேர்களும் வாயை திறக்காதது ஏன்?
- மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன?
- உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து
- காங்கிரஸ், பாஜக தனித்து நின்றால் காணாமல் போய்விடும்! – சீமான்
”ஓட்டு பிச்சைக்காக செயல்படுகிறார் சீமான்” ஹெச்.ராஜா ஆவேசம்
அரசியல் ஓட்டு பிச்சைக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற பிரிவினைவாதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதை தொடர்ந்து இரு குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து பாஜக கண்டனம் தெரிவித்து வந்தது. நம்முடைய தமிழ் மக்களை தவறாக தூண்டிவிட்டு அரசியல் ஓட்டுப்பிச்சைக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற மோசமான பிரிவினைவாத சக்திகளின் மீது அரசாங்கமும் காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பாஜகவையோ மோடியையோ விமர்சிப்பவர்களை எப்போதும் தேச துரோகிகள் என கூறி வரும் ஹெச்.ராஜா, தற்போது ராஜீவ் காந்தி கொலை குறித்தான சர்ச்சை பேச்சை தொடர்ந்து சீமானை பிரிவினைவாத சக்தி என விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய தமிழ் மக்களையும் தமிழ் உணர்வுகளையும் தவறாக தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் ஒட்டு பிச்சைக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் காவல்துறையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...@BJP4India pic.twitter.com/2pXQknszZc
— H Raja (@HRajaBJP) October 14, 2019
அடுத்த கட்டுரையில்
