பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று கூறுவதா? ஜோதிமணிக்கு எச். ராஜா கண்டனம்
பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று கூறுவதா?
நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜோதிமணி மற்றும் பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காரசாரமாக விவாதம் செய்ததால் விவாதத்தின் இடையே திடீரென ஜோதிமணி எழுந்து வெளியேறிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கரு.நாகராஜனுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த விவாதத்தில் ஜோதிமணி பேசும்போது பாரதப் பிரதமரை அடிப்பேன் என்று பேசியதாகவும் அவர் பேசியதை நெறியாளர் கண்டிக்காமல் இருந்ததால்தான் கரு.நாகராஜன், ஜோதிமணியை அவ்வாறு பேச நேரிட்டது என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது, ’பாரதப் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று ஜோதிமணி சொன்னதை கண்டிக்காமல் கரு.நாகராஜன் அவர்களை தனிமனித தாக்குதல் கூடாது என்று நெல்சன் சேவியர் பேசியது அருவருக்கத்தக்க செயல். ஆனால் என்ன செய்வது நெல்சனின் டிவிட்டர் பக்கத்தை போய் பாருங்கள் இவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும்.
மொத்தத்தில் தொலைக்காட்சி விவாதம் என்பதே ஆரோக்கிமற்றதாகவும் சர்ச்சைகளுக்கு மட்டுமே இடம் கொண்டிருப்பதாகவும், நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்