வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (07:59 IST)

தொலைக்காட்சி விவாதத்தில் ஒருமையில் பேசிய பாஜக பிரமுகர் – வெளியேறிய ஜோதிமணி எம்.பி!

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக பிரமுகர் கரு நாகராஜன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஒருமையில் பேசியதை அடுத்து அவர் விவாதத்தைப் புறக்கணித்து வெளியேறினார்.

நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக எம்பி கலாநிதி உள்ளிட்டோருடன் பாஜகவின் கரு நாகரான் கலந்துகொண்டார். விவாதத்தில் ஜோதிமணி கொரோனா காலத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பேசிக்கொண்டு இருந்தபோது பாஜகவின் கரு நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி இழிவுபடுத்தினார்.

இதனையடுத்து ஜோதிமணி அந்த விவாதத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஆதரவாக கலாநிதியும் வெளியேறினார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜோதிமணிக்கு ஆதரவாக கருநாகராஜனுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இனிமேல் கரு நாகராஜன் கலந்துகொள்ளும் விவாதங்களில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை எனப் பலரும் அறிவித்து வருகின்றனர்.