ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (08:40 IST)

சீனாவில் இருந்து வந்து சொதப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் – தமிழகம் கொடுத்த பணம் என்ன ஆனது?

சீனாவிடம் தமிழக அரசு சார்பில் ரேபிட் கருவிகள் வாங்க கொடுத்த தொகை திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளைக் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டன. அதில் முதல்கட்டமாக வந்த கருவிகளை பயன்படுத்தியதில் மாறுபட்ட முடிவுகள் வெளியானதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது. 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி அளித்துவிட சொல்லி அறிவித்தது.

இந்நிலையில் கருவிகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் தமிழக அரசு கொடுத்த 1.5 கோடி ரூபாய் தொகை முழுவதும் திருப்பி வாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக மருத்துவ பணிகள் சேவை கழக மேலாண் இயக்குனர் உமாநாத் ’தமிழகத்தில் 5,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப் பட்டன. ஆனால் அதற்கான பயன்பாடு சரியில்லாததால் சீனாவிடம் கொடுத்த மொத்த தொகையும் திரும்ப பெறப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.