வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (11:52 IST)

சேனல் ஆரம்பித்த ஹெச் ராஜா – இனி இல்லை அட்மின் தொல்லை !

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச் ராஜா தமிழகத்தில் சர்ச்சை மன்னனாக இருந்து வருகிறார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அல்லது முகநூலில் ஒரு பதிவினைப் பகிர்ந்தாலோ அனைத்தும் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறுகிறது. அதனால் அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்வைக்கிறது என தவறாக நினைத்துவிட வேண்டாம்.

அவர் கூறுபவை அனைத்தும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் ஆதாரப்பூர்வமற்றதாகவும் இருக்கின்றன என்பதே ஒரேக் காரணம். பெரியார் சிலை உடைப்பு முதல் வைரமுத்து ஆண்டாள் விஷயம் வரை அனைத்து விஷயங்களிலும் ராஜாவின் கருத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளன. அதே நேரம் அவருக்கான ஆதரவாளர்களும் சமூகவலைதளங்களில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது ராஜா தனது அதிகாரப்பூர்வமான யுடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் பிரச்சாரத்திற்க்கான ஒரு ஊடகமாக இந்த யுடியூப் சேனலை அவர் தொடங்கியிருக்கிறார் என தெரிகிறது. ராஜாவின் சேனலை முன்னிட்டு இனி எந்தக் கருத்தையும் சொல்லிவிட்டு அதை என் அட்மின் கூறினார் என தப்பமுடியாது பலரும் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர்.