கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தாரா காலிஸ்தான் தீவிரவாதி? எச் ராஜாவின் பதிவு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 134 கோடி ரூபாய் கொடுத்தோம் என காலிஸ்தான் தீவிரவாதி கூறியதாக பத்திரிகையில் வந்த செய்தியை பாஜக பிரமுகர் எச் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த செய்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ரிச்மென்ட் குருவாராவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்ததாகவும் அப்போது சிறையில் உள்ள தங்கள் அமைப்பின் தலைவர்களை விடுவிக்க 134 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது
ஆனால் தங்களிடம் பணம் வாங்கிவிட்டு வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரவிந்த் ஏமாற்றி விட்டதாகவும் தீவிரவாதி ஒருவர் பேட்டி அளித்த செய்தியின் புகைப்படத்தை எச் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்
இதையடுத்து கெஜ்ரிவாலின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. I.N.D.I கூட்டணி என்பது பாரதத்தின் எதிரிகளின் ஊழல் கூட்டணியே என்று எச் ராஜா கூறியுள்ளார்
Edited by Siva