வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (07:40 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன்: சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அதிரடி..!

sukesh chandaraskear
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன் என சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி தொழில் அதிபர் ஒருவரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னிடம் பணம் வாங்கியதாக ஏற்கனவே சுகேஷ் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுவேன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வருவேன் என்றும் அவருக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்

கெஜ்ரிவாலுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் தருவேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறைக்கு வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva