வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (20:47 IST)

சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன்- அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டிருந்தது.
 
இவ்வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 
 
அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், ''நேரில் ஆஜராகாத தன்னை ED கைது செய்யக்கூடாது என  உத்தரவிடக்கோரி'' டெல்லி ஐகோர்டில் மனுதாக்கல் செய்தார்.
 
ஆனால், டெல்லி ஐகோர்ட் அந்த உத்தரவிட மறுத்துவிட்டது.
 
அதன்பின்னர், ED அதிகாரிகள்  நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை செய்து, அவரை கைது செய்தனர்.
 
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து இன்று மதியம் அவர் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
ED அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தபோது கைது செய்து அவரிடம் கைது பற்றி செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர்,  ''நான் உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி என் வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும் நாட்டிற்கு சேவை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இவ்வழக்கில் ஏற்கனவே மணீஸ் சிசோடியா கைதாகி சிறையில் உள்ள நிலையில், சமீபத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டார். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தற்போது முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகியுள்ளது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.