வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (16:54 IST)

விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம்: எச்.ராஜா

பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் கடந்த சில வருடங்களாக தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விகடனில் நேற்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கார்ட்டூன் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த புகைப்படத்தை அடுத்து எச் ராஜா இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த அநாகரீக பத்திரிகை விகடனுக்கு ஒவ்வொரு பாஜக தொண்டனும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.  விகடன் குழுமத்தின் அனைத்து  பிரசுரங்களையும் புறக்கணிப்போம்.