புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (10:21 IST)

ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் நேற்றைய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று செங்கோட்டையில் விவசாயிகள் தங்களுடைய கொடியை ஏற்றி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறிய ஆர்எஸ்எஸ் ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் நடந்த வன்முறைகளும் செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதுm கண்டனத்துக்கு உரியது என்றும் ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் விவசாயிகளின் செயல் தேச ஒற்றுமைக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் அவமானப்படுத்துவதாகும் என்றும் ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது