புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (14:24 IST)

போஸ்ட் போட்டு பஞ்சர் ஆகும் எச்.ராஜா: விளாசும் நெட்டிசன்ஸ்!

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை என போஸ்ட் போட்டுள்ளது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளராக பணியார்றி வந்த வில்சன் என்பர் இரவு 9.45 மணியளவில் சுட்டுக்கொள்ளப்பட்டார். களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  
 
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் காவலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. 2 பேரில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. 
 
இந்த செய்தி வெளியானதும், பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை என போஸ்ட் போட்டுள்ளார். 
 
இதை கண்ட இணையவாசிகள் எச்.ராஜாவை கடுமையாக சாடி வருகின்றனர். உங்களுக்கு அனைத்திலும் மதம் தேவையா என விமர்சித்து வருகின்றனர். சும்மா இல்லாமல் இது போன்று பேட்டை போட்டு தன்னை தானே டேமேஜ் செய்துக்கொள்கிறார் எச்.ராஜா.