இது மட்டும் ஆண்மையுள்ள செயலா ? – இளையராஜாவுக்கு நெட்டிசன்கள் கேள்வி !

Last Modified புதன், 8 ஜனவரி 2020 (15:48 IST)
சைக்கோ படத்தின் டிரைலரில் இளையராஜாவின் இசை இல்லாமல் பீத்தோவானின் இசைப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹையாத்ரி, நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் நடித்துள்ள சைக்கோ படத்தின் டிரைலர் இன்று காலை. ஒவ்வொரு பிரேமும் ஓவியம் போல அமைந்திருக்கும் அந்த டிரைலர் முழுவதும் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குப் பீத்தோவானின் இசைப் பயன்படுத்த பட்டுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் 96 படத்தில் தன்னுடைய இசை பயன்படுத்த பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது ‘
இது மிகவும்  தவறான விஷயம். 80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது‘ என இளையராஜா சொல்லி சர்ச்சையைக் கிளப்பினார். இப்போது அவர் இசையமைக்கும் ஒரு படத்தில் பீத்தோச்வானின் இசையைப் பயன்படுத்துவது ஆண்மையுள்ள செயலா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :