1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (18:08 IST)

தீபிகா படுகோனேவுக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு: பாஜக எம்பி அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் போராட்டம் குறித்து பாலிவுட்டின் முக்கிய நடிகர் நடிகைகள் அமைதி காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே தைரியமாக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியது மட்டுமின்றி நேரடியாக போராட்டம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். தீபிகா படுகோனேவின் இந்த தைரியத்தை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் பாராட்டி வருகின்றனர்
 
இந்த நிலையில் தீபிகா படுகோனேவுக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக எம்பி ராஜேஷ் சின்ஹா அவர்கள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஜே.என்.யூ பல்கலைக்கழகத்துக்கு தீபிகா சென்றதன் பின்னணியில் தாவூத் இப்ராஹிம் உள்ளார் என்று அவர் கூறியது எதன் அடிப்படையில் என்பது தெரியவில்லை என்றும், இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று என்ற கோரிக்கை எழுந்துள்ளது