1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. h raja comment about jananayagan movie

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

h raja vijay
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. எனவே நாளை ரிலீஸாகவிருந்த அந்த திரைப்படம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளுக்கு தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சில மாற்றங்களை செய்ய சொல்லி அதை படக்குழு செய்து கொடுத்துவிட்டது. ஆனாலும் மறு தணிக்கை செய்ய வேண்டும்.. மேலும் சிலர் படம் பார்க்க வேண்டும்.. எனவே கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியத்தின் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் விஜய்க்கு நிறைய ஆதரவுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி. எம்.பி,ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் ஏற்கனவே விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பாஜக விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறது என சொல்லியிருந்தனர்.

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா ‘நாங்கள் நெருக்கடி கொடுக்கணும்னா செப்டம்பர் 27ம் தேதியே கொடுத்திருப்போம். மத்திய அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது.. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்கவே முடியாது.. நாங்கள் எப்போதும் ஒருத்தருடைய பலவீனத்தை கையிலெடுடுத்து நெருக்கடி கொடுக்க மாட்டோம்’ என பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!