வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 8 ஜனவரி 2026 (11:48 IST)

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம்: காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம்: காங்கிரஸ் எம்பி கண்டனம்..!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
நாளை படம் வெளியாகவிருந்த நிலையில், இன்னும் சான்றிதழ் கிடைக்காதது திட்டமிட்ட அரசியல் அடக்குமுறை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பும் படங்களுக்கு உடனடியாக அனுமதி தரும் பாஜக அரசு, விஜய்யின் படத்தை முடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
 
சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி துறையை போல இப்போது தணிக்கை வாரியத்தையும் எதிர்க்கும் குரல்களை ஒடுக்க பயன்படுத்தும் கருவியாக பாஜக மாற்றியுள்ளதாக அவர் சாடியுள்ளார். 
 
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக மாற்றப்பட்டிருப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி குரல் கொடுத்துள்ளது, வரும் தேர்தலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கான அறிகுறியா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
 
Edited by Siva