1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (14:09 IST)

பெரியார் டிரஸ்ட்டை அரசுடமையாக்க வேண்டும் – ஹெச் ராஜா கருத்து !

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பெரியார் ட்ரஸ்ட்டை அரசுடமையாக்க வேண்டும் என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தும் இன்னும் அரசியல் களம் அனலாக தகித்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக திக, திமுக ஆகியக் கட்சிகளின் அபிமானிகளுக்கும் பாஜக மற்றும் இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் டிவிட்டரில் வார்த்தைப் போர் நடந்துவருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் இந்து அறநிலையத்துறை கோயில்களில் மழைக்காக யாகம் நடத்த சொல்லி கோயில்களுக்கு அறிக்கை அனுப்பியது. இதை எதிர்த்து திக தலைவர் வீரமணி கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனை பாஜக அபிமானியான எஸ் வி சேகர் கேலி செய்து டிவிட் செய்தார். அதனால் இருபக்கங்களிலும் இருந்து தாக்குதல் அதிகமானது.

இதையடுத்து டிவிட்டரில் வீரக்குமார் என்பவர் பெரியார் டிரஸ்ட்டை அரசுடமையாக்க வேண்டும் என கூறியிருந்தார். அதை ரிடிவிட் செய்த ஹெச் ராஜா ‘மிகச்சரி. அறக்கட்டளைப் பொதுப்பட்டியலில் வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.