செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:22 IST)

”பாகிஸ்தானில் ஏன் இந்து ஜனாதிபதியாக இருந்ததில்லை??”.. ஹெச்.ராஜா கேள்வி

பாகிஸ்தானில் ஒரு ஹிந்துவோ, கிறிஸ்துவரோ, ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்நிலையில், ஹெச்.ராஜா, இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, சிறிஸ்துவோ, ஜனாதிபது ஆகியிருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.