வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (14:04 IST)

குடியுரிமைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதே தேச துரோகம்: எச்.ராஜா பகீர்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதே தேச துரோகம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 
 
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, சாதாரணமாக கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மதவாதமாக பிரிவினைவாதமாக, தேச விரோத சக்திகள் மாற்ற முயற்சி செய்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதே தேச துரோகம் என பேசியுள்ளார். 
 
அதோடு தனது டிவிட்டர் பக்கத்தில், வரலாறு புவியியல் பற்றி எல்லாம் போராட்டத்தை தூண்டுபவர்கள் சிந்திப்பதில்லை. சர்வதேச அரசியல், நாடுகளின் வர்த்தக யுத்தம், அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியம் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவது இல்லை.
 
அவர்களுக்கு ஓட்டின் மீது உள்ள பற்று அளவு நாட்டின் மீது கிடையாது. தங்கள் பதவியை பாதுகாப்பதில் உள்ள அக்கரை, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் இருப்பதில்லை என மறைமுகமாக எதிர்கட்சிகளை குற்றம்சாட்டியுள்ளார்.